ஆப்நகரம்

அமெரிக்காவை அழிக்கும் பட்டன் என் மேஜை மீதுள்ளது: கிம் ஜாங் உன் மிரட்டல்

''அமெரிக்காவை அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜையில் இருக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும்'' என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

TNN 1 Jan 2018, 12:19 pm
''அமெரிக்காவை அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜையில் இருக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும்'' என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
Samayam Tamil kim jong un says the nuclear button is always on his desk
அமெரிக்காவை அழிக்கும் பட்டன் என் மேஜை மீதுள்ளது: கிம் ஜாங் உன் மிரட்டல்



ஆங்கிலப்புத்தாண்டு நேற்று தொடங்கியபோது வடகொரிய அதிபர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அவர் பேசுகையில், '' அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜை மீது உள்ளது. இன்னும் அதிக ஏவுகனை சோதனைகளை செய்து போர் தொடுக்க வல்லமையான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உள்ளோம் . அமெரிக்காவின் எல்லா நகரங்களையும் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் எங்களிடம் உள்ளது. அதனால் அமெரிக்கா எங்கள் மீது ஒரு போதும் போர் தொடுக்க இயலாது'' என்று புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகள் செய்வதை அமெரிக்கா , ஜப்பான் போன்ற உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவை பல முறை மிரட்டி வருகிறது. இதனால் ஐ. நா சபை வடகொரியா மீது பொருளாதாரத்தடை விதித்தது.

ஆனால் வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளமால் தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது புத்தாண்டு செய்தியிலும் அமெரிக்காவை மிரட்டியுள்ளது.

அடுத்த செய்தி