ஆப்நகரம்

ஊழல் செய்த ராணுவ ஜெனரலுக்கே மரண தண்டனை நிறைவேற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

ஊழல் செய்த ராணுவ ஜெனரலுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி, வடகொரிய அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

TNN 16 Dec 2017, 9:12 am
பையோங்யாங்: ஊழல் செய்த ராணுவ ஜெனரலுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி, வடகொரிய அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Samayam Tamil kim jong uns to aide executed by north korean death squad
ஊழல் செய்த ராணுவ ஜெனரலுக்கே மரண தண்டனை நிறைவேற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!


உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி, தொடர் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருகிறது. ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்டவை கடும் பொருளாதார நெருக்கடிகளை விதித்தும், எதற்கும் அச்சம் கொள்ளவில்லை.

உலகின் பார்வையில் கொடூர சர்வாதிகாரியாக திகழும் அதிபர் கிம் ஜாங் உன், தவறு என்று தெரிந்தால் யாரையும் மன்னிப்பதில்லை. அதற்கு உதாரணமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வடகொரிய ராணுவத்தில் துணை ஜெனரலாகவும், அதிபரின் வலதுகரமாகவும், தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவராகவும் ஹவாங் பையோங்க் சூ செயல்பட்டு வந்தார்.

இவர் கடந்த அக்டோபர் 13ஆம் தேதிக்கு பின், எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து ‘டெத் ஸ்குவாட்’(Death Squad) எனப்படும் மரண தண்டனை நிறைவேற்றும் படைப்பிரிவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் வடகொரிய அரசு செய்தி நிறுவனம் அதனை உறுதிசெய்துள்ளது. ஹவாங் பையோங்க் சூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், கிம் ஜாங் உன் உத்தரவுப்படி ‘டெத் ஸ்குவாட்’ மூலம் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kim Jong Un's to aide executed by North Korean death squad.

அடுத்த செய்தி