ஆப்நகரம்

சாக்லேட் அளவைக் குறைக்க மாட்டோம்: கிட்கேட் உறுதி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் சாக்லேட் அளவைக் குறைக்கும் முடிவை கிட்கேட் கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.

The Guardian 31 Dec 2016, 6:58 pm
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் சாக்லேட் அளவைக் குறைக்கும் முடிவை கிட்கேட் கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil kitkat maker gives three fingers the thumbs down
சாக்லேட் அளவைக் குறைக்க மாட்டோம்: கிட்கேட் உறுதி


ப்ரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய முடிவினால் கிட்கேட் நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் எதிரொலியாக கிட்கேட் சாக்லேட்டின் அளவை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டது.

நஷ்டத்தை ஈடுகட்ட சாக்லேட்டின் விலையை உயர்த்துவதற்கும் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கடைசியில் அதற்கு மாற்றாக நான்கு விரற்கிடை அளவு கொண்ட சாக்லேட் பாக்கெட்டை மூன்று விரற்கிடை அளவாகக் குறைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டில் கிட்கேட் நிறுவனத்தின் செயல் இயக்குனராக உள்ள பியோனா கென்ட்ரிக், கிட்கேட் சாக்லேட் அளவைக் குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் அதே சமயத்தில் விலையும் உயர்த்தப்படாது என்றும் உறுதி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி