ஆப்நகரம்

ஹை ஹீல்ஸ் அணிய மறுத்த பெண் பணிநீக்கம்: அடக் கொடுமையே!!

ஹை ஹீல்ஸ் அணிய மறுத்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிர்சிகரமான சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

TNN 13 May 2016, 6:12 pm
லண்டன்: ஹை ஹீல்ஸ் அணிய மறுத்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிர்சிகரமான சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil london receptionist sent home for not wearing heels
ஹை ஹீல்ஸ் அணிய மறுத்த பெண் பணிநீக்கம்: அடக் கொடுமையே!!


நிக்கோலா தோர்ப் (27) என்ற பெண், நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் மேற்பார்வையாளர், நிக்கோலா தோர்ப்பை 2 முதல் 4 இன்ச்கள் கொண்ட ஹை ஹீல்ஸ் செருப்பு தான் அணிந்து பணிக்கு வர வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், தனக்கு ஹை ஹீல்ஸ் அணிந்து அவ்வளவு நேரம் பணிபுரிய முடியாது என்று கூறி இதனை மறுத்த நிக்கோலா, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பணி புரிந்த அவுட்சோர்சிங் நிறுவனத்துக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளது. ஆனால், அவர் பணியில் இருந்த நிறுவனத்துக்கு ஆடை கட்டுப்பாடு என்று ஒன்றும் கிடையாது.

அடிப்படை பெண்ணியல் வாதியான நிக்கோலா தோர்ப், அங்குள்ள ஆண்கள் ஹை ஹீல்ஸ் அணிய வேண்டாம், தட்டையான ஷூ அணியலாம். ஆனால், பெண்கள் மட்டும் ஏன் அவ்வாறு அணிய வேண்டும் என கொந்தளித்துள்ளார்.

நிறுவனங்களில் உள்ள ஆடை கட்டுப்பாடுக்கு பணியாதவர்களை பணிநீக்கம் செய்யலாம் என அந்நாட்டின் சட்டமும் கூறுகிறது.

இந்நிலையில், தன்னை போல் வேறு சில பெண்களும் இதேபோன்று அவதிக்குள்ளாகியுள்ளனர் என்பதை அறிந்த நிக்கோலா மனு ஒன்றை தயார் செய்து, அதில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கையெழுத்தும் வாங்கியுள்ளார்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிக்கோலா, ஆடை கட்டுப்பாடு சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தையும் நீடியுள்ளார்.

அடுத்த செய்தி