ஆப்நகரம்

உரிமையாளருக்காக மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்த வளர்ப்பு நாய்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளாருக்காக வளர்ப்பு நாய் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 25 Jan 2021, 8:16 pm
துருக்கி நாட்டின் ட்ராப்ஜன் நகரை சேர்ந்தவர் சிமல் சென்டர்க். இவர் போன்கக் எனும் பெண் நாய் ஒன்றை வளார்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி சிமல் சென்டர்க் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil வளர்ப்பு நாய்
வளர்ப்பு நாய்


அப்போது அவர் கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் பின்னாலேயே சென்ற அவரது வளர்ப்பு நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்துள்ளது. ஆனால், சென்டர்க்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, ஒவ்வொரு நாள் காலையிலும் மருத்துவமனைக்கு ஓடி செல்லும் அந்த வளர்ப்பு நாய் மருத்துவமனை வாசலிலேயே சிமல் சென்டர்க் வருகைக்காக காத்திருந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் அதை விரட்டினாலும் அதனை கண்டுகொள்ளாமல் காத்திருந்துள்ளது. அந்த நாயை கொண்டு செல்ல சென்டர்க் மகள் முற்பட்டுள்ளார். இருப்பினும், அது மீண்டும் மருத்துவமனைக்கே ஓடி சென்றுவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இப்படியாக, மருத்துவமனையில் இருந்து சிமல் சென்டர்க் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே அந்த நாய் காத்திருந்துள்ளது. இறுதியாக, சிகிச்சை முடிந்து சென்டர்க் வரும்பொழுது தனது வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போன்கக்கை அவர் அரவணைத்துக் கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு செல்ல கட்டுப்பாடுகள்: ஜோ பைடன் அதிரடி!

போன்கக்கால் யாருக்கும் எந்த பிரச்சினையோ ஆபத்தோ ஏற்படவில்லை. அது அனைவருக்கும் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது என்று மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி