ஆப்நகரம்

ஈரானில் இன்று காலை பயங்கர நில நடுக்கம்!!

ஈரான் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த, அதாவது ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கெர்மான் நகரில் கட்டிடங்கள் குலுங்கின.

TNN & Agencies 1 Dec 2017, 11:04 am
ஈரான் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த, அதாவது ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கெர்மான் நகரில் கட்டிடங்கள் குலுங்கின.
Samayam Tamil magnitude 6 0 earthquake hits iran
ஈரானில் இன்று காலை பயங்கர நில நடுக்கம்!!


ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து 5.0, 5.1 ரிக்டர் அளவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர்.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை. மக்கள் பதட்டத்தில் பெட்ரோல் நிரப்புவதற்கு பெட்ரோல் பங்குகளுக்கு ஓடினர். செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈராக் எல்லையை ஒட்டிய ஈரானுக்கு உட்பட்ட மேற்கு கெர்மன்ஷா மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, 500 பேர் பலியாகினர். கடந்த 1990 ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் நிலநடுக்கத்திற்கு 40,000 பேர் பலியாயினர். 3,00,000 பேர் வீடுகளை இழந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

அடுத்த செய்தி