ஆப்நகரம்

Mahinda Rajapaksa: மைனாரிட்டியாக இருக்கும் ராஜபக்‌ஷே பிரதமர் ஆனது எப்படி?

மைனாரிட்டியாக இருக்கும் மஹிந்த ராஜபக் கூட்டணி எப்படி இலங்கையில் பிரதமராக பதவி ஏற்றது என கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 26 Oct 2018, 10:38 pm
கொழும்பு : இலங்கையில் பிரதமராக முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக் பதவி ஏற்றுள்ளார். மைனாரிட்டியாக இருக்கும் அவரது கூட்டணி எப்படி பதவி ஏற்றது என கேள்வி எழுந்துள்ளது.
Samayam Tamil Mahinda-Rajapaksa2


இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவர் பதவி ஆட்டம் கண்டுள்ளது.
அதனால் அவர் பதவி விலகுவதாக தெரிவித்தார். இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீரா சற்று முன் அறிவித்தார்.
இதையடுத்து மைனாரிட்டியாக இருக்கும் ராஜபக்‌ஷே கூட்டணி புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

பதவியிழந்தார் இலங்கை பிரதமர் : புதிய பிரதமரான ராஜபக்சேவுக்கு சுப்ரமணியன்சுவாமி வாழ்த்து

இலங்கையின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. பெரும்பான்மை பெற 113 இடங்கள் வேண்டும்.


பிரதமரான ராஜபக்சே : இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கிம் அதிர்ச்சி

ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கூட்டணி 105 இடங்கள் பெற்றுள்ளன.
ஆனால் ராஜபக்‌ஷேவின் கூட்டணி வெறும் 95 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளன. இருப்பினும் இலங்கையின் புதிய பிரதமராக இன்று இலங்கை அதிபர் சிறிசேனா முன்னிலையில் பதவியேற்றுள்ளர்.

ரணில் விக்கிரமசிங்கே அறிக்கை :
இலங்கைக்கு நான் தான் பிரதமர்; தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன்; அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி