ஆப்நகரம்

லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு... நூற்றுக்கணக்கானோர் பலி?

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 5 Aug 2020, 12:26 am
மேற்காசிய நாடான லெபான் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. அதன் துறைமுக நகரும், தலைநகருமான பெய்ரூட்டில் இன்றிரவு (ஆகஸ்ட் 4) சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil blast


துறைமுகத்துக்கு அருகில் உள்ள வெடிப்பொருள்கள் சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பின் விளைவாக, கிடங்கு அமைந்திருந்த கட்டடம் மற்றும் அதன் அருகில் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் உயிர்சேதம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதாக என்பது குறித்தும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த அதிபயங்கர குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்க கூடும் என்றும், பல படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பின்போது எழுந்த பலத்த சப்தத்தை கேட்டு, துறைமுகத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் பயத்தில் அலறிஅடித்துக் கொண்டு தங்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். குண்டுவெடிப்பின் தாக்கத்தால், பெய்ரூட் துறைமுகத்தில் ராட்சக அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுப்பின.

லெபான் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குண்டுவெடிப்பு சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உதவி எண்கள் அறிவிப்பு: பெய்ரூட் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, அங்கு வசித்துவரும் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால், குறிப்பிட்ட தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளும்படி, பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பிதீயடையாமல் அமைதி காக்கும்படி தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி