ஆப்நகரம்

மலேசியாவில் 162 பேர் கைது; ஐ.எஸ். தீவிரவாதிகள் என தகவல்

மலேசியாவில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 162 பேர் கைது செய்யப்பட்டதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CNN 24 Mar 2016, 8:14 pm
மலேசியாவில், ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 162 பேர் கைது செய்யப்பட்டதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil malaysia 162 individuals arrested for links with isis
மலேசியாவில் 162 பேர் கைது; ஐ.எஸ். தீவிரவாதிகள் என தகவல்


பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, மலேசியா முழுவதும் தீவிரவாதம் தொடர்பாக, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள விமான நிலையம்,ரயில் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் ஏராளமான போலீசார் தீவிரவாதத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரித்ததில், அவர்களுக்கும்,ஐ.எஸ்., அமைப்புக்கும் தொடர்புள்ளது உறுதி செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து அவர்களை விசாரித்து வருவதாகவும் மலேசிய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மலேசியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி