ஆப்நகரம்

மாலியில் ராணுவப் புரட்சி வெடித்தது; அதிபர், பிரதமர் கைது - ஐ.நா அதிர்ச்சி!

ராணுவ கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து மாலியில் பதற்றம் நிலவி வருகிறது.

Samayam Tamil 19 Aug 2020, 7:43 am
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு மாலி. இங்கு அதிபர் மற்றும் பிரதமர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. அதிபராக இப்ராகிம் பவுபக்கர் கெய்டா-வும், பிரதமராக பவ்பவ் சிஸ்சே-வும் பதவி வகித்து வந்தனர். விவசாயம் முக்கியத் தொழிலாக இருக்கிறது. முக்கிய ஏற்றுமதி பொருளாக பருத்தி விளங்குகிறது. பல மாதங்களாகவே அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் பொதுமக்களுக்கு ஆதரவாக ராணுவத்தினரும் கிளர்ச்சியாளர்களாக மாறினர். இதன் தொடர்ச்சியாக நேற்று ஒட்டுமொத்த நாட்டையும் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
Samayam Tamil Mali


தலைநகர் பமாகோ -வில் பீரங்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றுடன் ராணுவத்தினர் வலம் வருகின்றனர். அரசு அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதுபற்றி தகவலறிந்த பிரதமர் சிஸ்சே உடனே ராணுவ உயர் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் உடன்படவில்லை. இதனைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தேர்தல் நேரத்தில் ட்ரம்புக்கு வந்துள்ள புதிய தலைவலி!!

இருவரையும் ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இதன்மூலம் மாலியில் ராணுவப் புரட்சி வெடித்துள்ளது. அதிபரின் ஆட்சி வீழ்த்தப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. தலைநகர் பமாகோவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் சுதந்திரமாக உலா வருகின்றனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

பொதுமக்களும் தெருக்களில் திரண்டு ராணுவத்தினருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள அதிபர், பிரதமரை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், மாலியின் அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

கைலாசா கரன்சி, வரும் 22ஆம் தேதி அறிமுகம்- நித்தி அறிவிப்பு?

அதிபர், பிரதமரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் மாலி அதிபர் பவுபக்கர் கெய்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தையும் கலைத்துவிட்டார்.

அடுத்த செய்தி