ஆப்நகரம்

விசா விண்ணப்பத்தில் தவறுதலாக ’பயங்கரவாதி’ என டிக் செய்த முதியவர்; வாழ்நாள் தடை விதித்த அமெரிக்கா!

நியூயார்க்: ’பயங்கரவாதி’ எனக் குறிப்பிட்டதால், 70 வயது முதியவருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

Samayam Tamil 8 Dec 2018, 5:26 pm
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ஸ்டீவன்சன்(70) மற்றும் அவரது மனைவி மாரியான் ஆகியோர், நியூயார்க் நகருக்கு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
Samayam Tamil Visa


இதற்காக விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்டவற்றை புக் செய்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க விசா விண்ணப்பத்தில் ஸ்டீவன்சன் தவறுவதலாக ‘பயங்கரவாதி’ என்ற ஆப்சனை தேர்வு செய்துள்ளார். இதனால் அவர்கள் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு வாழ்நாள் தடை விதித்துள்ளது.

அந்த முதிய தம்பதி தாங்கள் செலவிட்ட தொகை அனைத்தும் வீணாகிப் போனது. இதுகுறித்து ஸ்டீவன்சன் கூறுகையில், நாங்கள் ஆன்லைனில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம்.

ஆனால் முழுவதுமாக நிரப்புவதற்குள் நேரம் முடிந்துவிட்டது. அதாவது சிஸ்டம் கிராஷ் ஆகிவிட்டது. மீண்டும் சரியான பிறகு, பூர்த்தி செய்தவற்றை மாற்ற முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க எல்லைக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டேன்.

அவர்களிடம் எனது பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை அளித்தேன். ஆனால் அவர்கள் என்னை பயங்கரவாதி என முத்திரை குத்தி விட்டனர். நான் ஒரு 70 வயது முதியவர். எனக்கு பயங்கரவாதி என்றால் என்ன என்று கூட தெரியாது.

தவறுதலாக நிகழ்ந்து விட்டது என்று கூறினேன். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை என்று ஸ்டீவன்சன் கூறினார்.

அடுத்த செய்தி