ஆப்நகரம்

அதிவேகத்தில் சென்ற ரோலர்கோஸ்ட்: காற்றில் பறந்த செல்போனை பிடிக்க முயன்ற நபர்.! நடந்தது என்ன?

ஸ்பெயின் நாட்டில் உள்ள தீம் பார்க் ஒன்றில் இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. ரோலர்கோஸ்ட்டில் பயணித்த ஒருவரது செல்போன் தவறி விழுகையில் அதை லாவகமாக மற்றொருவர் பிடித்துள்ளார்.

Samayam Tamil 21 Sep 2019, 1:31 pm
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பயணிக்கும் ரோலர்கோஸ்ட் மிகவும் பிரசித்த பெற்ற ரைடு ஆகும். இந்த ராடில் சீட் பெல்ட் அணிந்து உட்கார்ந்தவுடன் பயம் கலந்த உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நொடிக்கு நொடி திருப்பங்களைத் தரும் இந்த ரோலர்கோஸ்ட் அனைத்து தீம் பார்க்கிற்கும் ராஜா என்றே சொல்லலாம்.
Samayam Tamil 1


அருகில் இருப்பவரின் முகத்தை கூட பார்க்காமல் கண்ணை இருக்க மூடி பயணிக்க வைக்கும் இந்த ரைடில், தவறி விழும் செல்போனை லாவகமாக பிடிக்கும் ஒருவரது வீடியோ வெளியாகிக் காண்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது .


நியூசிலாந்தைச் சேர்ந்த கெம்ப் என்றவர் தனது குடும்பத்துடன் ஸ்பெயினில் உள்ள தீம் பார்க்கிற்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள ரோலர்கோஸ்ட்டில் பயணிக்கும் போது அவருக்கு முந்தைய சீட்டில் இருந்தவருடைய மொபைல் போன் எதிர்பாராதவாறு தவறியிருக்கிறது.

அதிவேகத்தில் சுமார் 150 கி.மீ. வேகத்தில் மேல் நோக்கி இறங்கிய ரோலர்கோஸ்ட்டில் பயணித்த கெம்ப் தனது ஒற்றைக் கையால் அந்த போனை பிடித்திருக்கிறார். இதனையடுத்து உலகக்கோப்பையில் இரண்டு ரன் வித்தியாசத்தில் எதிர் அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியதை போல கெம்ப் கூச்சலிட்டு சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார்.

அடுத்த செய்தி