ஆப்நகரம்

டோனட் சாப்பிடும் போட்டியில் மூச்சுத் திணறி உயிரிழந்த போட்டியாளர்

டோனட் சாப்பிடும் போட்டியில் மூச்சுத் திணறி போட்டியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 6 Apr 2017, 2:19 pm
கொலராடோ: டோனட் சாப்பிடும் போட்டியில் மூச்சுத் திணறி போட்டியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man dies in colorado doughnut eating contest
டோனட் சாப்பிடும் போட்டியில் மூச்சுத் திணறி உயிரிழந்த போட்டியாளர்


அமெரிக்காவின் கொலராடோ நகரில் டோனட் சாப்பிடும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு விதமாக நடைபெற்ற போட்டியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் 80 விநாடியில் டோனட் சாப்பிடும் முயற்சியில், டிராவிஸ் மலூஃப் என்ற போட்டியாளர் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது தொண்டையில் டோனட் சிக்கிக் கொண்டது. உடனடியாக மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் வருவதற்கு மூச்சுத் திணறி, மலூஃப் உயிரிழந்தார். வேகமாக உண்டதன் காரணமாக மூச்சுக் குழாயில் உணவு சிக்கிக் கொண்டதால், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதே நாளில் ஃபேர் ஃபீல்டு நகரில் நடைபெற்ற பேன் கேக் உண்ணும் போட்டியில் பங்கேற்ற மாணவர் கெட்லின் நெல்சன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள போட்டி ஏற்பாட்டாளர்களான வூடூ டோனட் நிறுவனம், மலூஃபின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டனர். அவர் உட்கொண்டது சராசரி அளவை விட மிக மிக அதிகம் என்று தெரிவித்தனர்.

A Colorado man has died after choking on a giant pastry during a doughnut-eating competition.

அடுத்த செய்தி