ஆப்நகரம்

பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்த பலே ஆசாமி

தென்னாப்பிரிக்காவில் வெறும் பலூன்களை சாதாரண நாற்காலியில் கட்டி வானில் பறந்தவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

TNN 27 Oct 2017, 9:39 am
தென்னாப்பிரிக்காவில் வெறும் பலூன்களை சாதாரண நாற்காலியில் கட்டி வானில் பறந்தவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Samayam Tamil man fly in sky with the help of helium balloon and chair
பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்த பலே ஆசாமி


பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டாம் மார்கன் என்பவர் வித்தியாசமான முயற்சிகளில் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுபவர். வானில் பறக்க வேண்டும், ஆனால் குறைந்த செலவில் பறக்க வேண்டும் என்று யோசித்த அவர் சட்டென்று ஒரு வித்தையை கையில் எடுத்தார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்குச் சென்ற அவர், ஹீலியம் காற்று அடைக்கப்பட்ட 100 பலூன்களை மொத்தமாக நாற்காலியில் கட்டினார்.

ஹிலீயம் காற்றுக்கு எடை குறைவு என்பதால், வானை நோக்கி செல்லும் இயல்புடையது.

எனவே, மொத்தமாக ஹீலியம் பலூன்களை கட்டியதால், நாற்காலியுடன் வானை நோக்கிப் புறப்பட்டார்.

சுமார் 8,300 அடி வரை வானில் பறந்து அசத்தினார். 2 மணி நேரம் வானில் பறந்து காட்டிய டாம் மார்கன், பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டை பெற்றது.

அடுத்த செய்தி