அமெரிக்காவில் தனது டூத் பிரஷில் டாய்லட்டை சுத்தப்படுத்திய மனைவியை, கணவன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கசின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் யூஜின் மேல்ப்ளோவர் ( வயது 42). இவரது மனைவி யூஜின் பல் விலக்கும் டூத் பிரஷை வைத்து கழிவறையை சுத்தம் செய்து வந்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த யூஜின் அந்த டூத் பிரஷை கொண்டே கொடூரமாக தாக்கி, மனைவியை கொலை செய்து உள்ளார்.
இதுகுறித்து அவர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மனைவியை எவ்வாறு கொலை செய்தார் என்பது பற்றியும் தன் மனைவியின் பல்லை பலமுறை கழிவறை கிண்ணத்தில் அடித்து உடைத்ததாகவும், தன் மனைவியின் தொண்டையை டூத் பிரஷ்ஷால் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
போலீசார் அளித்த அறிக்கையில், யூஜினின் மனைவி உடலில் 126 இடங்களில் காயம் இருந்ததாகவும் அது டூத் பிரஷ்ஷால் ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும்அவருடைய கண்கள், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தொண்டையில் அடிபட்டிருந்தது. அவருடைய தொண்டையில் ஏற்பட்ட காயத்தால் இரத்த கசிவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
USA: Man killed wife for cleaning toilet with his toothbrush.