ஆப்நகரம்

சிங்கத்தோடு ஒரு பயணம்! சொகுசாக மாட்டிக்கொண்ட தொழிலதிபர்

பாகிஸ்தானில் சிங்கத்துடன் காரில் பயணம் வந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 18 Jun 2017, 12:57 pm
பாகிஸ்தானில் சிங்கத்துடன் காரில் பயணம் வந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil man who took his lion for a drive in pakistan arrested
சிங்கத்தோடு ஒரு பயணம்! சொகுசாக மாட்டிக்கொண்ட தொழிலதிபர்


பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சாக்லைன் ஜாவத். மிருகக் காட்சி சாலை நடத்தி வரும் இவர், சிங்கம் ஒன்றை இரவு நேரத்தில் தனது காரில் ஏற்றிக்கொண்டு கராச்சி பகுதி முழுவதும் சொகுசாக பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது காரில் சிங்கத்தைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.



மேலும், ஆட்டோ, பைக், கார் போன்றவற்றில் சென்றவர்களும் பீதியடைந்துள்ளனர். சிங்கத்தை காரில் பார்த்த சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் இந்த வீடியோவைப் பார்த்த போலீசார், ஜாவத்தை கைது செய்தனர்.



இது தொடர்பாக மூத்த காவல்துறை கண்காணிப்பாலர் முஹ்தாஸ் ஹைதர் கூறுகையில், மிருகக் காட்சி சாலை நடத்தி வரும் ஜாவத், சிங்கத்தை இப்படி கொண்டு சென்றது ஏற்கத்தக்கது அல்ல. இதனால், அவரை கைது செய்தோம். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

A Pakistani man who took his pet lion for a night-time drive through the streets of Karachi has been arrested after police saw the adventure on social media.

அடுத்த செய்தி