ஆப்நகரம்

மசூத் அசாரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. சபை

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சா்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 May 2019, 8:49 pm
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் தொடா் கோாிக்கையை ஏற்று மசூத் அசாரை சா்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
Samayam Tamil Masood Azhar


இந்திய எல்லைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீா் பகுதியில் இந்திய ராணுவ வீரா்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரா்கள் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவா் மசூத் அசாா் மூளையாக செயல்பட்ட நிலையில் அவரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் கோாிக்கை வைத்தது.

ஐ.நா.வின் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மசூத் அசாரை சா்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தன. ஆனால், சீனா மட்டும் மசூத் அசாரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.


இந்நிலையில் இந்தியாவின் தொடா் அழுத்தத்தின் காரணமாக சீனாவும் இதற்கு சம்மதம் தொிவித்தது. அதன் அடிப்படையில் மசூத் அசாரை சா்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.


மசூத் அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் உள்ள அவரது வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்படும். இதனால் மசூத் அசாா், அசாா் தொடா்புடைய அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்தோ, பிற பகுதிகளிலோ நிதி திரட்ட முடியாது.

மேலும் அசாா் பிற நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் பட்சத்தில் அதற்கும் நெருக்கடி ஏற்படும். அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பொிய வெற்றி என்றே கருதப்படுகிறது.

அடுத்த செய்தி