ஆப்நகரம்

சூரியனைக் கடந்த புதன்: நாசா வெளியிட்ட வீடியோ!

புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வு நூற்றாண்டில் 13 முறை நிகழுமாம்...

Samayam Tamil 13 Nov 2019, 10:32 am
கடந்த திங்கட்கிழமை புதன் கிரகம் சூரியனைக் கடந்து சென்ற அரிய நிகழ்வு நடந்தது. இந்த அரிய நிகழ்வை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil 20485454-7640205-image-a-16_1572628533222


இந்த விஷயத்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகினேன் - குஷ்பு!

சூரியக் குடும்பத்தின் உறுப்பினரான புதன் கிரகம் தனது சுற்றுவட்டாரப் பாதையின் வழியே செல்லும்போது சூரியனைக் கடக்கும் நிகழ்வை நிகழ்த்தும். அதன்படி, இப்போது நவம்பர் 11ஆம் தேதி நடந்துள்ளது.

சூரியனைப் புதன் கடந்தபோது, சிறிய கடுகு சூரியனைக் கடப்பதுபோல பார்த்தவர்களுக்கு தெரிந்துள்ளது. புதன் கிரகத்தின் பரப்பளவு சூரியனைவிட மிகச் சிறியது என்பதாலே, இப்படி நம் கண்களுக்குத் தெரிகிறது.


இந்த நிகழ்வு மீண்டும் 2032ஆம் ஆண்டு நவம்பரில் நிகழும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கூறியுள்ளனர். இதற்குமுன் இந்த நிகழ்வு 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது.

ஆவின் பால் மூலம் முப்பால் பரப்பும் ராஜேந்திர ‘பாலா’ஜி

புதன் சூரியனைக் கடந்து செல்லும் காட்சியை நாசா தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. நாசாவின் இந்த ட்விட்டர் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி