ஆப்நகரம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட்!?

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிபதியாக தமிழர் ஸ்ரீ சீனிவாசனை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமிக்கலாம் என்று கருதி வந்த நிலையில் அந்தப் பதவிக்கு 63 வயது மெரிக் கார்லண்ட் என்பவரை அவர் நியமிக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

TOI Contributor 16 Mar 2016, 8:30 pm
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீ சீனிவாசனை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமிக்கலாம் என்று கருதி வந்த நிலையில் அந்தப் பதவிக்கு 63 வயது மெரிக் கார்லண்ட் என்பவரை அவர் நியமிக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil merrick garland is president obamas choice to replace antonin scalia on the supreme court
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட்!?


அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகள் உள்ளனர். அந்த நாட்டு சட்டத்தின்படி நீதிபதிகள் இறக்கும் வரை பதவியில் நீடிக்கலாம். உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்காலியா உயிரிழப்பை அடுத்து காலியிடத்தை நிரப்ப அதிபர் ஒபாமா உத்தரவிட்டு இருந்தார்.

அமெரிக்காவின் கொலம்பியா மாகாண சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதிகளில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி மூன்று நீதிபதிகளின் பெயர் இறுதி செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இதில், தமிழகத்தில் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஸ்ரீ சீனிவாசனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இவருடன் நீதிபதிகள் மெரிக் கார்லண்ட், பிரவுண் ஜேக்சன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

ஸ்ரீ சீனிவாசனின் தந்தை தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். அவரது தாயார் சென்னையைச் சேர்ந்தவர்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக மெரிக் கார்லண்ட்டை இன்று இரவு அதிபர் ஒபாமா அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருநெல்வேலியில், ஸ்ரீ சீனிவாசனுக்கு இந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்று யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி