ஆப்நகரம்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு!

மெக்சிகோ நாட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

Samayam Tamil 17 Feb 2018, 9:08 am
மெக்சிகோ நாட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
Samayam Tamil mexico struck by massive 7 2 magnitude earthquake
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு!


மெக்ஸிகோ சிட்டியின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவானது. பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்துகொண்டு தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் சேதாரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மெக்சிகோ நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 369 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி