ஆப்நகரம்

தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!

தாய்லாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Oct 2022, 8:23 pm
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 31 பேர் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil crime scene


இதில் குழந்தைகளும் பெரியவர்களும் அடங்குவர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபரை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி கழுத்தறுத்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை!
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால், சட்டவிரோத ஆயுதங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தாய்லாந்தில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரிதானவை இருப்பினும், 2020 ஆம் ஆண்டில், சொத்து தகராறு காரணமாக, ராணுவ அதிகாரி ஒருவர் 29 பேரை சுட்டுக் கொன்றார். அதில் 57 பேர் காயமடைந்தனர்.

அடுத்த செய்தி