ஆப்நகரம்

ஹார்வர்டு பல்கலை., தமிழ் சங்கம் சார்பில் 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடை

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக மிஸ்ஸோரி தமிழ் சங்கம் சார்பில் 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

TNN 14 Nov 2017, 6:28 am
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக மிஸ்ஸோரி தமிழ் சங்கம் சார்பில் 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil missouri tamil sangam donated 30000 dollar to tamil harvard university
ஹார்வர்டு பல்கலை., தமிழ் சங்கம் சார்பில் 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடை


உலகின் மூத்த மொழிகளாகவும், செம்மொழிகளாகவும் விளங்கும் தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய ஏழு மொழிகளில் தமிழைத் தவிர மற்ற ஆறு மொழிகளுக்கும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இதுவரை இருக்கை இல்லாத நிலை நிலவிவருகிறது.

அதன்படி தமிழ் இருக்கை நிறுவுவதற்கான மொத்த செலவு ரூ.33 கோடி ஆகும். இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை அவர்களது சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர். தமிழக அரசும் தன் பங்கிற்கு 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
மீதித் தொகையை உலகத் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாக திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நிதி திரட்டும் முயற்சியில் மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் சார்பில் செயின்ட் லூயிஸ் நகரில் முத்தமிழ் விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் 30,000 டாலர்கள் மிஸ்ஸோரி தமிழ் சங்கத்தால் ஹார்வர்டு பல்கலைகழகத்திற்கு தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி