ஆப்நகரம்

வந்தாச்சு.. கொரோனாவை 100 சதவீதம் அழிக்கும் தடுப்பூசி!

கொரோனாவை 100 சதவீதம் அழிக்கும் தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Dec 2020, 6:43 am
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசிவருகிறது. பாதிப்புகள் சற்று குறைந்திருந்த நாடுகளில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தலை தூக்கத் தொடங்கியுள்ளன.
Samayam Tamil moderna


தடுப்பூசி ஒன்று தான் கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக இயங்கிவருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிப்சர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி வைரஸ் கிருமியை அழிப்பதில் 90 சதவீதம் திறனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவை அழிப்பதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நாயால் அமெரிக்காவின் புதிய அதிபருக்கு நேர்ந்த விபரீதம்; எப்படி இருக்காரு தெரியுமா?

இந்நிலையில் அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் தங்களது தடுப்பூசி 100 சதவீதம் செயல்திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நோய் தொற்று தீவிரமாக உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி பயனளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்டனா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தால் ஜாக்ஸ், “எங்களிடம் மிகவும் பயனுள்ள ஒரு தடுப்பூசி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதை நிரூபிப்பதற்கான தரவு இப்போது எங்களிடம் உள்ளது. இந்த தொற்று நோயை அழிப்பதில் எங்கள் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.

தடுப்பூசி தேவையில்லை; கொரோனா முடிந்து விட்டது: மூத்த விஞ்ஞானி தகவல்!

இதையடுத்து தங்களது தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதியளிக்குமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடமும் ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத்துறையிடமும் மாடர்னா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

அடுத்த செய்தி