ஆப்நகரம்

தான்சானியாவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

தான்சானியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

TNN 10 Jul 2016, 9:10 am
டார் எ ஸலாம்: தான்சானியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Samayam Tamil modi in tanzania
தான்சானியாவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு


ஆப்பிரிக்க நாடுகளில் பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக மொசாம்பிக் நாட்டிற்கு சென்ற மோடி, பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இரண்டாம் கட்டமாக தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகருக்கு சென்ற மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மகாத்மா காந்தி வாழ்ந்த வீடு, அவர் பயணித்த ரயில் வழித்தடம் ஆகியவற்றை பார்வையிட்டார். இதையடுத்து மூன்றாம் கட்டமாக தான்சானியா நாட்டின் டார் எ ஸலாம் விமான நிலையத்திற்கு மோடி சென்றடைந்தார். A special gesture for a special visit. PM of Tanzania, Mr. Kassim Majaliwa welcomed PM @narendramodi at the airport. pic.twitter.com/I6fa0BFXVB— PMO India (@PMOIndia) July 9, 2016 தான்சானியா நாட்டின் பிரதமர் காசிம் மஜாலிவா, வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னார் மெம்பே உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். Landed to a lively welcome in Tanzania. pic.twitter.com/saDl6Y0NJi— Narendra Modi (@narendramodi) July 9, 2016 மேலும் ஆடல், பாடலுடன் அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இருநாடுகளின் உறவை பலப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் கென்யா நாட்டிற்கு நாளை புறப்பட்டு செல்கிறார்.

அடுத்த செய்தி