ஆப்நகரம்

சிரியாவில் உச்சக்கட்ட போர்: அலெப்போவில் இருந்து 400 பேர் இடம்பெயர்வு

சிரியாவில் நடைபெற்று வரும் உச்சக்கட்ட போரால், போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு அலெப்போவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேறினர்.

TNN 27 Nov 2016, 6:49 pm
பெய்ரூட்: சிரியாவில் நடைபெற்று வரும் உச்சக்கட்ட போரால், போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு அலெப்போவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேறினர்.
Samayam Tamil more than 400 civilians flee east aleppo as regime intensifies
சிரியாவில் உச்சக்கட்ட போர்: அலெப்போவில் இருந்து 400 பேர் இடம்பெயர்வு


சிரியாவில் அரசுப் படைகளுக்கும், போராளிக் குழுவினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளை போராளிக் குழுவினரிடம் இருந்து, அரசுப் படைகள் மீட்டன. ஆனால் அலெப்போ நகரை மட்டும், போராளிக் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் அந்நகரின் கிழக்குப் பகுதியில் இருந்து 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசுக் கட்டுபாட்டில் உள்ள மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற சண்டையில், 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கடந்த 15ஆம் தேதி, அரசுப் படைகள் கிழக்கு அலெப்போவில் தாக்குதலை தொடங்கியது. இதுவரை 219 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 27 குழந்தைகளும் அடங்குவர்.

More than 400 Syrian civilians have fled rebel-held districts of eastern Aleppo for the government-controlled west as regime forces advance in the city, a monitor said Sunday.

அடுத்த செய்தி