ஆப்நகரம்

அமெரிக்காவில் பள்ளி சிறுமி கைது! போலீஸ்க்கு கண்டனம்

அமெரிக்காவில் புனித ரமலான் நோன்பை கடைபிடித்து வந்த சிறுமியை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Jun 2017, 1:21 pm
அமெரிக்காவில் புனித ரமலான் நோன்பை கடைபிடித்து வந்த சிறுமியை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil muslim school girl arrested offensively in us
அமெரிக்காவில் பள்ளி சிறுமி கைது! போலீஸ்க்கு கண்டனம்


அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ரோஸ்மவுண்ட் வெலி உயர்நிலை பள்ளியில் இஸ்லாமிய சிறுமி படித்து வந்துள்ளார். இதில், அவருக்கும் பள்ளி சிறுவன் ஒருவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அந்த சிறுவன் சிறுமியை தீவிரவாதி என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த பள்ளி பாதுகாப்பு அதிகாரி எந்த விசாரணையும் நடத்தாமல் இஸ்லாமிய சிறுமியின் கையில் விலங்கு மாட்டியதோடு, அவர் அணிந்திருந்த ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமி கூச்சலிட்டதால், பள்ளி நிர்வாத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதன் காரணமாக சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட பின் சிறுமியை விடுவித்தனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் வாழும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், மாவட்ட ஒழுங்குமுறை ஆணையத்திடம் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி