ஆப்நகரம்

தீ விபத்தில் உயிருக்கு போராடிய இந்தியர்; பர்காவால் காப்பாற்றிய அரபு பெண்

அரபு நாட்டில் லாரிகள் மோதி தீ பிடித்த விபத்தில், உயிருக்குப் போராடிய இந்தியரை, அந்நாட்டு பெண்மணி பர்காகொண்டு காப்பாற்றிய சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

TNN 1 Oct 2017, 8:55 pm
அரபு நாட்டில் லாரிகள் மோதி தீ பிடித்த விபத்தில், உயிருக்குப் போராடிய இந்தியரை, அந்நாட்டு பெண்மணி பர்கா கொண்டு காப்பாற்றிய சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
Samayam Tamil muslim woman saved burning mans life using islamic robe purdah pardah
தீ விபத்தில் உயிருக்கு போராடிய இந்தியர்; பர்காவால் காப்பாற்றிய அரபு பெண்


ஐக்கிய அரபு நாட்டில், ரஸ் அல் கைமாஹ் என்ற பகுதியைச் சேர்ந்த ஜவஹர் சைப் அல் குமைட்டி என்ற பெண், காரில் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதையும், அங்கிருந்து உடலில் தீப்பற்றியவாறு ஒருவர் ஓடி வருவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.


அந்த பகுதி வழியாக வந்த மற்ற வாகனத்தில் வந்தவர்களும் விபத்தைப் பார்த்து, செய்வதறியாது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சுதாரித்துக் கொண்ட, ஜவஹர், தனது காரில் இருந்த பெண்மணியின் பர்காவை கழற்றி கொடுத்துவிட்டு காருக்குள்ளேயே இருக்கச் சொன்னார். பின்னர், உடலில் தீபிடித்து அலறித் துடித்துக் கொண்டிருந்த டிரைவரின் உடலில் மீது புர்க்காவால் அடித்து தீயை கட்டுப்படுத்தி, டிரைவரை காப்பாற்றினார்.

தொடர்ந்து தீயணைப்பு படையின் வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தில் ஜவஹர் காப்பாற்றிய நபர் இந்தியாவைச் சேர்ந்த ஹக்கிரித் சிங் என்றும், ஜவஹரின் வீரத்தீர செயல் பாராட்டும் வகையில், சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி