ஆப்நகரம்

வீரர்களை விட, வேடிக்கை பார்க்க சென்றவர்களுக்கு 346% அதிகம் செலவு; அலறவிட்ட வடகொரியா!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வீரர்களை விட, அதிகாரிகளுக்கு வடகொரியா அதிகம் செலவிட்டுள்ளது.

Samayam Tamil 22 Feb 2018, 12:51 pm
சியோல்: குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வீரர்களை விட, அதிகாரிகளுக்கு வடகொரியா அதிகம் செலவிட்டுள்ளது.
Samayam Tamil n korea envoys visit cost 346 more than athletes training
வீரர்களை விட, வேடிக்கை பார்க்க சென்றவர்களுக்கு 346% அதிகம் செலவு; அலறவிட்ட வடகொரியா!


தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 2018ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் அருகிலுள்ள வடகொரியா, 22 வீரர்களுடன் கலந்து கொண்டது.

இவர்களின் தங்கும் வசதி, பயிற்சி உள்ளிட்டவற்றிற்காக ரூ.32 லட்சம் ($50,000) செலவிடப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஒலிம்பிக் போட்டிகளை காண, வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜங் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை தென்கொரிய அரசு மேற்கொண்டது.

அதிகாரிகளின் வசதிகளுக்காக மட்டும் ரூ.1.4 கோடி ($223,237) செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவு வீரர்களுக்கு செய்யப்பட்டதை விட, 346% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

N Korea envoys' visit cost 346% more than athletes' training.

அடுத்த செய்தி