ஆப்நகரம்

பிரிட்டன் தேர்தல் : நாராயண மூர்த்தியின் மருமகன் 2வது முறை எம்.பியாக தேர்வு

பிரிட்டனில் நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்லில் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி இரண்டாவது முறை எம்.பியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

THE ECONOMIC TIMES 10 Jun 2017, 1:06 pm
பிரிட்டனில் நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்லில் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி இரண்டாவது முறை எம்.பியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil n r narayana murthys son in law re elected to uk parliament
பிரிட்டன் தேர்தல் : நாராயண மூர்த்தியின் மருமகன் 2வது முறை எம்.பியாக தேர்வு

பிரிட்டன் பொதுத் தேர்தல் இந்திய வம்சாவளியினர் 56 பேர் வேட்பாளராக களமிறக்கப்பட்டனர். இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினரில், தொழிலாளர் கட்சியின் சார்பில் ஏழு பேரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ஐந்து பேரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இந்ததேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ரிஸ்மண்ட் தொகுதியில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (36) போட்டியிட்டார். இவரை ஏதிர்த்து தொழிலாளர் கட்சியை சார்ந்த டான் பெரி போட்டியிட்டார். இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைப்பெற்றது.

இந்த தேர்தலில் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் 36,458 வாக்குகளும், டான் பெரி 13,350 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் ரிஷி சுனக் ரிச்மண்ட் தொகுதி எம்.பியாக வெற்றிப் பெற்றுள்ளார்.இவர் 2015-ம் ஆண்டு நடத்த தேர்தலில் அதே தொகுதியில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி