ஆப்நகரம்

அமெரிக்காவில் 4 பேரைச் சுட்டுத்தள்ளிய நிர்வாண ஆசாமி

அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 23 Apr 2018, 8:49 am
அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil ap_18112511134804_custom-bf5dbe43cb39883e3052dec4d798f36eca64d4d9-s800-c85


அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தின நாஸ்வில்லேவில் உள்ள உணவு விடுதிக்குள் ஆடையின்றி நுழைந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

அப்போது ஜேம்ஸ் ஷா ஜூனியர் என்பவர் துணிச்சலுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் சண்டையிட்டு துப்பாக்கியைப் பிடுங்கினார். உடனே, தாக்குதல் நடத்திய ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய ஆசாமியின் பெயர் டிராவிஸ் ரெய்ன்கிங் என்றும் இவர் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து கைது செய்யப்பட்டவர் என்றும் தெரிந்துள்ளது.

அடுத்த செய்தி