ஆப்நகரம்

ஆடைகளை களைந்த ஆசிரியர்

பள்ளி வளாகத்திலேயே தன் ஆடைகளை களைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

TNN 27 Jun 2016, 7:37 pm
சீனா : குவாக்ஸியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பட்டப்பகலில் பள்ளியில் படிக்கும் மாணவியை, அதே பள்ளியில் ஆய்வகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். தன் ஆடைகளை முற்றிலும் களைந்து அப்பெண்ணிடம் மூர்க்கமாக நடந்து கொண்டுள்ளார். உடனடியாக பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பெண்ணிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
Samayam Tamil naked teacher try to rape girl student
ஆடைகளை களைந்த ஆசிரியர்


இந்த செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மனநிலை சரியில்லாதவர் என்றும், 2011-ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்கள் மனநல காப்பகத்தில் சிகிச்சைப்பெற்று வந்ததாகவும் பள்ளியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்கு பின் பள்ளி நிர்வாகம் வகுப்பு எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் கீழ் ஆய்வகப்பணியில் அவரை அமர்த்தியுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகத்தினர், அவரை மருத்துவமனையில் மன நல சிகிச்சையில் சேர்த்தனர். மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி