ஆப்நகரம்

பூமியைக் குறிவைக்கும் விண்கல்

முட்டை வடிவிலான ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 2 Sep 2016, 7:30 pm
முட்டை வடிவிலான ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil nasa explores asteroids close encounter with earth
பூமியைக் குறிவைக்கும் விண்கல்


ராட்சத விண்கல் ஒன்று பூமிக்கு மிகவும் அருகில் செல்லவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் 35 மீட்டர் நீளத்துட்ன முட்டை வடிவில் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

வெண்வெளியில் இதுவரையில் கவனிக்கபடாத இந்த விண்கள் திடீரென பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இருப்பினும், இந்த விண்கல்லினால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள தொலைவில் கால்பங்கு தூரம் இடைவெளியிலேயே இந்த விண்கல் பூமியைவிட்டு விலகிச்சென்றுவிடும் என்பதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்னளனர்.

அடுத்த செய்தி