ஆப்நகரம்

இலங்கையில் ஜப்பான் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்!

கடல் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஓமன் நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளன.

TNN 26 Jul 2016, 1:08 am
கடல் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஓமன் நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளன.
Samayam Tamil navy ships from us japan and oman arrive in sri lanka
இலங்கையில் ஜப்பான் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்!


முதல்கட்டமாக, அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதற்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்க கடற்படையின் பசிபிக் கட்டளைப்பிரிவின் 13வது ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல், ஒரேநேரத்தில் 700 கடற்படை வீரர்களையும், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டது

நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்த போர்க்கப்பலில், சிறிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் உள்ளன. இக்கப்பலில் வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையினர், இலங்கை கடற்படையினர் 200 பேருக்கு மனிதாபிமான மற்றும் அவசரகால உதவிப்பணிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

இதேபோன்று, ஜப்பான் கடற்படையை சேர்ந்த இனாசூமா, சுசூட்ஸ்கி மற்றும் ஓமன் கடற்படையை சேர்ந்த கசாப் ஆகிய போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகம் வந்தடைந்துள்ளன. இவற்றுடன் இலங்கை போர்க்கப்பல்களும் ஒன்றிணைந்து, நட்புறவு மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி