ஆப்நகரம்

உறவினரை கொன்றதால் 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராமத்தினர்!

இந்தோனேஷியாவில் உறவினரை கடித்து கொன்ற முதலையை பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட முதலைகளை கிரமத்தினர் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 16 Jul 2018, 5:17 pm

இந்தோனேஷியாவில் உறவினரை கடித்து கொன்ற முதலையை பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட முதலைகளை கிரமத்தினர் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவில்பப்புவாஎன்ற மாநித்தில் உள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் இந்த முதலைப் பண்ணையை, வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்குகோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த 48 வயதான சுகிட்டோ என்பவர் முதலைப்பண்ணைக்கு பக்கத்தில் உள்ள புல்வெளியில் கால்நடைக்கு புல் அறுக்க சென்றிருந்தார். அப்போது முதலைப்பண்ணையில் உள்ள முதலை ஒன்று வெளியில் வந்து அவரை கடித்துள்ளது. தன்னை பாதுகாக்க முதலைப்பண்ணைக்குள் ஓடிய அவரை மற்ற முதலைகள் கடித்து கொன்றுள்ளது.
Samayam Tamil _102542315_7ee6f1ff-a327-4041-9016-248523395882


இந்நிலையில் சுகிட்டோவின்மரணத்திற்கு காரணமக இருந்த முதலைகளை பழிவாங்கும் நோக்காத்தில், கத்தி , கம்பிகளுடன் முதலைப் பண்ணைக்குள் பொதுமக்கள் புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை தடுத்தும் கேட்காமல் , சுமார் 300 முதலைகளை கொன்றனர்.

இதுதொடர்பாக பண்ணை நிர்வாகத்தினர் சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளித்தர். சம்பவ இடத்திற்கு வந்த காவ்துறையினர் பொதுமக்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி