ஆப்நகரம்

நேபாள பிரதமர் பதவி விலக ஆளும்கட்சியில் வலுக்கும் குரல்கள்!

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி விலக வேண்டுமென அந்நாட்டு ஆளும் கட்சியிலேயே குரல்கள் வலுப்பெற்றுள்ளன.

Samayam Tamil 30 Jun 2020, 9:28 pm
நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் ஆளும்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களே குரலெழுப்பியுள்ளனர். நேபாள பிரதமர் பதவியில் இருந்து தன்னை வெளியேற்றவும், புஷ்ப கமல் தகால் தலைமையிலான எதிர் அணியினரை ஆட்சியில் அமர வைக்கவும் இந்தியா முயற்சிப்பதாக ஷர்மா ஒலி கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.
Samayam Tamil ஷர்மா ஒலி


நேபாளுக்கு புதிய அரசியல் வரைபடம் தயாரித்தது இந்தியாவுக்கு பிடிக்கவில்லை எனவும், அதனால் எதிரணியினரை ஆட்சியில் அமர வைக்க இந்தியா தீவிரமாக முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் அவரது பேச்சு அவருக்கே எதிர்வினை ஆற்றியுள்ளதாக தெரிகிறது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 44 உறுப்பினர்கள் அடங்கிய இக்கூட்டத்தில், பிரதமர் ஷர்மா ஒலி பதவி விலக வேண்டுமென புஷ்ப கமல் தகால், மாதவ் நேபாள், ஜல நாத் கனல், பம்தேவ் கவுதம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஷர்மா ஒலி நேபாளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டதாகவும், கவனத்தை திசைத்திருப்ப இந்தியா மீது பழி போடுவதாக புஷ்ப கமல் தகால் குற்றம்சாட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டை மற்ற தலைவர்களும் முன்வைத்தனர்.

மேலும், ஷர்மா ஒலியை பதவிநீக்கம் செய்ய இந்தியா முயற்சிப்பதாக குற்றம்சாட்டுவது தவறு எனவும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் அண்டை நாடான இந்தியாவுடன் இருக்கும் நல்லுறவில் விரிசல் ஏற்படும் எனவும் மூத்த புஷ்ப கமல் தகால் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி