ஆப்நகரம்

மீண்டும் ஊரடங்கு: புதிய வகை வைரஸ் தொற்றால் அரசு முடிவு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 29 Nov 2021, 5:39 pm

ஹைலைட்ஸ்:

  • மீண்டும் ஊரடங்கு
  • புதிய வகை வைரஸ் தொற்றால் அரசு முடிவு!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்பு படம்
கோப்பு படம்
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, கொரோனா பிடியில் உலகமே சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று புதிய அவதாரம் எடுத்துள்ளது.
இந்த உருமாறிய தொற்று, இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா, டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றுகளை மிகவும் அபாயகரமானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒமைக்ரான் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று, இஸ்ரேல், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி விட்டது. இதை அடுத்து ஆப்பிரிக்க நாடுகள் உடனான விமானப் போக்குவரத்தை பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
'ஒமைக்ரான்' வைரசின் புகைப்படம் - வெளியிட்டது WHO!
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நெதர்லாந்து நாட்டு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, பார்கள், உணவகங்கள், அத்தியாவசியமற்ற கடைகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்கள், மாலை 5 மணி முதல், காலை 5 மணி வரை மூட வேண்டும்.

அத்தியாவசியமின்றி பொது மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் இருந்து நாட்டிற்கு வந்த பயணிகள், உடனடியாக, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பகுதி நேர ஊரடங்கு, நிலைமைக்கு ஏற்ப நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி