ஆப்நகரம்

அணு ஆயுத சோதனை செய்து மலையை 11 அடி நகர்த்திய வட கொரியா

அடுத்தடுத்து அணு ஆயுத சோதனை செய்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்த நாடு வடகொரியா.

Samayam Tamil 14 May 2018, 10:06 pm
அடுத்தடுத்து அணு ஆயுத சோதனை செய்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்த நாடு வடகொரியா.
Samayam Tamil north korea nuclear test


உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை திணித்து வருகின்றது. அப்படி அடங்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதித்து அதன் வழிக்கு கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் அமெரிக்காவை ஒரு பொருட்டாக கூட நினைக்காத வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத சோதனைகளை செய்து மிரட்டி வந்தது.

மலையை நகர்த்திய வடகொரியா:
வடகொரியா அணு ஆயுத சோதனை செய்வதற்காக ‘மேண்டேப்’ மலையில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் அமைத்துள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக ஆயுத சோதனை நடத்தப்பட்டது.

முதலாவது அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்ட போது 6.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2வது முறை சோதனை செய்த போது 4.1 ரிக்டர் அதிர்வு உருவானது. இந்த சோதனை ஜப்பானில் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டு போல 10 மடங்கு சக்திவாய்ந்தது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதனால் சோதனை செய்யப்பட்ட ‘மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், சுமார் 1.6 அடி பூமிக்குள் இறங்கியுள்ளதாகவும் ரேடார் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பல நாடுகள் கேட்டுக்கொண்டதால் அணு ஆயுத சோதனையை நிறுத்தியுள்ளதாக வடகொரியா தற்போது நாடகமாடி வருகிறது.

அடுத்த செய்தி