ஆப்நகரம்

இனி 30 நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிச்சிடலாம்!

வெறும் 30 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பத்தை கொரிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

Samayam Tamil 6 Oct 2020, 5:13 pm

கடந்த சுமார் 10 மாதங்களாக கொரோனா வைரஸ் உலகையே பெரும் அவதியில் தள்ளியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டுபிடிப்பதில் ஏற்படும் தாமதமே அது வேகமாக பரவுவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. எனவே, கொரோனா தொற்றை வேகமாக கண்டறிவதற்கான வழிகளை ஆய்வளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
Samayam Tamil Covid-19 test


இந்நிலையில், 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்கான புதிய பரிசோதனை முறையை தென்கொரிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். தென்கொரியாவை சேர்ந்த பொஹாங் பல்கலைக்கழகம் SENSR என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி என்ன நிலவரத்தில் இருக்கிறது?

இதன் மூலம், வைரஸின் ஆர்என்ஏ அடிப்படையிலான கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள முடியும். ஒரே பரிசோதனைக் கூடத்தில் ஏராளமானோருக்கு பரிசோதனை செய்வது, பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் அருகே தொடர்பு வைத்துக்கொள்வது போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

இதற்கான பரிசோதனை கருவிகளை ஒரே வாரத்தில் தயார் செய்துவிட முடியும். கோவிட்-19 அல்லாமல் வேறு ஒரு புதிய தொற்றுநோய் உருவெடுத்தாலும் அதை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை கருவிகளை ஒரே வாரத்தில் உருவாக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிசிஆர் பரிசோதனை மிக துல்லியமானது என்றாலும் அதற்கான செயல்முறைகள் கடினம். தற்போது கொரிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஈசியாக வெறும் 30 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடித்துவிடலாம்.

அடுத்த செய்தி