ஆப்நகரம்

இனி கருணைக் கொலைகளுக்கு அனுமதி உண்டு: புதிய சட்டத்திற்கு மக்கள் ஆதரவு!

நியூசிலாந்தில் கருணைக் கொலைகளை சட்டப்பூர்வமாக்க ஆதரவாக பொதுமக்கள் வாக்களித்துள்ளனர்.

Samayam Tamil 30 Oct 2020, 5:39 pm

நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என மிகவும் அவதிப்படுவோர் கருணை அடிப்படையில் கொலை செய்யப்படுவர். கருணைக் கொலைகளுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மரணத்திலும் ஜனநாயகம் இருக்க வேண்டுமென கருணைக் கொலைகளுக்கு தடை நீக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Samayam Tamil Representational image


நியூசிலாந்து நாட்டில் அண்மையில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார். இந்த பொதுத்தேர்தலையொட்டி கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குதல், கருணைக் கொலைகளை சட்டப்பூர்வமாக்குவதலுக்கு பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

இந்நிலையில், கருணைக் கொலைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆதரவாக நியூசிலாந்து மக்களில் 65.2 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். ஒருவர் தனது மரணத்தை தேர்வு செய்ய உரிமையுண்டு என நியூசிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதுகுறித்து அரசிடமிருந்து நவம்பர் 6ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான பிறகு கருணைக் கொலைகள் சட்டப்பூர்வமாக்கப்படும். இதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே கருணைக் கொலைகளுக்கு தகுதியானவர்கள்.

அடுத்த ஆறு மாதங்கள் அல்லது சில மாதங்களிலேயே உயிரிழக்கும் தருவாயில் இருப்போர் கருணைக்கொலைக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பெர்க், மேற்கு ஆஸ்திரேலியா, கம்போடியா, கனடா ஆகிய நடுகளில் கருணைக் கொலைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி