ஆப்நகரம்

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 May 2019, 9:30 pm
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil kim jong un


சர்வதேச நாடுகள், ஐ.நா. சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்து வந்தது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனையை கைவிடுமாறு வடகொரியாவை, அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதுதொடர்பாக, இருநாடுகள் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சிறிது காலம் ஆயுத சோதனை எதுவும் நடத்தாமல் இருந்த வடகொரியா, சனிக்கிழமை மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி