ஆப்நகரம்

நீஸ் தாக்குதலுக்கு காரணமான நபரின் அடையாளம் தெரிந்தது

பிரான்சின் நீஸ் நகரில் 84 பேரை கொன்ற லாரி ஓட்டுநரின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது.

TNN 15 Jul 2016, 10:07 pm
பிரான்சின் நீஸ் நகரில் 84 பேரை கொன்ற லாரி ஓட்டுநரின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது.
Samayam Tamil nice attackdriver idenfied
நீஸ் தாக்குதலுக்கு காரணமான நபரின் அடையாளம் தெரிந்தது


31 வயதான அந்த கொடூர ஆசாமி துனீஷியாவை பூர்வீகமாக கொண்ட பிரான்ஸ் குடியுரிமை பெற்றவன் எனவும் அவனுடைய பெயர் மொஹமத் லஹ்வீஸ் புஹ்லெல் எனவும் தெரிய வந்துள்ளது.ஏற்கனவே சிறு குற்றங்கள் செய்ததற்காக பிரான்ஸ் காவல்துறையினரால் மொஹமத் கைது செய்யப்பட்டுள்ளான்.எனவே பிரான்ஸ் காவல்துறையின் குற்றவாளிகள் பட்டியலிலும் அவனுடைய பெயர் இடம்பெற்றுள்ளது.இதனால் அவனை அடையாளம் காண்பது காவல்துறையினருக்கு எளிதான காரியமாக இருந்துள்ளது.


அவன் தனியாக லாரியை ஓட்டி வந்தானா?அல்லது இந்த படுகொலை சம்பவம் பலரின் கைவரிசையா?என பிரான்ஸ் புலனாய்வுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.மேலும் தீவிரவாத இயக்கங்களுடன் மொஹமத்துக்கு தொடர்பு உள்ளதா?எனவும் விசாரித்து வருகின்றனர்.84 பேரை பலி கொண்ட இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.நீஸ் சம்பவத்திற்கு தற்போது வரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

அடுத்த செய்தி