ஆப்நகரம்

ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் திடீர் ராஜினாமா!

ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதர் இன்று திடீரென்று ராஜினாமா செய்தார்.

Samayam Tamil 9 Oct 2018, 10:54 pm
ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதராக செயல்பட்ட இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே, இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்
Samayam Tamil NIKKI HALEY


கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹாலே நியமிக்கப்பட்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் 166 வது கவர்னராகவும் நிக்கி பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை நிக்கி ஹாலே இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை. ஆனால், அவருடைய ராஜினாமா கடிதத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொண்டார் என்ற செய்திகள் மட்டும் வந்துள்ளன.

அடுத்த செய்தி