ஆப்நகரம்

பாதுகாப்பு அரண்கள் வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்

பாதுகாப்பு அரண்கள் வேண்டாம், நாடுகளிடையே ஒன்றிணைப்பு தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 21 Sep 2016, 3:28 am
நியூயார்க்: பாதுகாப்பு அரண்கள் வேண்டாம், நாடுகளிடையே ஒன்றிணைப்பு தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil no need of security wall obama
பாதுகாப்பு அரண்கள் வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகம் உள்ளது. அங்கு ஐ.நா.,பொது சபையின் 71-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், சிரியா உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றம், சர்வதேச தீவிரவாதம், அகதிகள் விவகாரம், கொரியதீபகற்ப பதற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் பொது சபை கூட்டத்தொடரில் நேற்று முதல் உரையாற்றி வருகின்றனர்.

முதல் நாள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது: உலகமயமாக்கலின் நலன்களை சமமாக பகிர்ந்து அமைக்கும் வரை , அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு வளர இடம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உலக நாடுகள், வர்த்தகத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற ஒபாமா, தங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை அமைத்த நாடுகள், சிறையில் உள்ளதைப் போல் இருக்கின்றன என்றும் கூறினார்.

உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவை என்றும் ஒபாமா கூறினார்.

அடுத்த செய்தி