ஆப்நகரம்

மீண்டும் எகிறும் கொரோனாவின் வேகம்... ஊரடங்கு தளர்வுகள் காரணமா?

உலகம் முழுக்க கொரோனாவால் நடைபெறும் குறிப்பிடத்தக்க சம்பவங்ளின் தொகுப்பு

Samayam Tamil 26 May 2020, 5:40 am
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தடுக்கவும் வழியின்றி, குணப்படுத்தவும் மருந்தின்றி அல்லாடி வருகின்றன உலக நாடுகள். இதற்கிடையில், பல உலக நாடுகள் கொரோனாவுடன் வாழப்பழகுங்கள் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
Samayam Tamil corona up and down


இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 47ஆயிரத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

அதேபோல உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 55 லட்சத்து 82 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,3 61,043 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக மெதுவாக உயர்ந்து வந்த உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கையானது, தற்போது (இந்த வாரம்) வெகு வேகமாக உயர்ந்து வந்துள்ளது இதில் கவனிக்கத்தக்கது. பல நாடுகளும் ஊரடங்கை விலக்கிக் கொண்டு மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நிலையில் இந்த வேகமான உயர்வு மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

அடுத்த செய்தி