ஆப்நகரம்

நோபல் பரிசு வென்றால் இனி எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?

நோபல் பரிசுத் தொகை உயர்த்தப்படுவதாக நோபல் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 6:27 pm

டைனமைட் வெடிகுண்டை கண்டுபிடித்த ஆல்ப்ரட் நோபல் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரர் ஆவார். இவர் மரணத்திற்கு பின் அந்த காலத்திலேயே 31 மில்லியன் கிரவுன்களை விட்டுச் சென்றார். அதன் இப்போதைய மதிப்பு 180 கோடி கிரவுன் ஆகும்.
Samayam Tamil Nobel Prize


இந்த சொத்துகளை வைத்து அறிவியல், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இத்துடன் பெரும் தொகையும் வழங்கப்படும். இதுவரை நோபல் பரிசுடன் வழங்கப்பட்ட தொகை பல்வேறு காலகட்டங்களில் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் நோபல் பரிசு பெறுவோருக்கு கூடுதலாக 1 மில்லியன் கிரவுன் (110,000 டாலர்) வழங்கப்படும் என்று நோபல் ஃபவுண்டேஷனின் தலைவர் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த ஆண்டு முதல் நோபல் பரிசு வெற்றியாளர்களுக்கு 10 மில்லியன் கிரவுன் வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு 8 கோடி ரூபாய்க்கு மேல்.

கொரோனாவை பரப்பியதில் சீனாவுக்கு WHO உடந்தை!

முன்பை விட செலவுகளும், மூலதனமும் நிலையாக இருப்பதால் கூடுதல் தொகையை பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நோபல் ஃபவுண்டேஷன் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டென் தெரிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் நோபல் பரிசுத் தொகை 150,000 கிரவுனில் இருந்து 1 மில்லியன் கிரவுனாக உயர்த்தப்பட்டது. இதன்பின் 80களிலும், 90களிலும் பரிசுத் தொகை கணிசமாக உயர்ந்து 9 மில்லியன் கிரவுனை எட்டியது.

இதன்பின் 2000ஆம் ஆண்டில் பரிசுத் தொகை 10 மில்லியன் கிரவுனாக உயர்த்தப்பட்டது. ஆனால் 2008-09ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியால் நோபல் ஃபவுண்டேஷன் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நோபல் பரிசுத் தொகை 2012ஆம் ஆண்டில் 8 மில்லியன் கிரவுனாக குறக்கப்பட்டது.

இதன்பின்னர் 2017ஆம் ஆண்டில் மீண்டும் நோபல் பரிசுத் தொகை 9 மில்லியன் கிரவுனாக உயர்த்தப்பட்டது. தற்போது 10 மில்லியன் கிரவுனாக பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி