ஆப்நகரம்

ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கி சென்ற வடகொரியா!

வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில், தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது மீண்டும் தென்கொரியாவுக்கு இணையாக தனது பழைய நேர மண்டலத்தை மாற்றியுள்ளது

Samayam Tamil 5 May 2018, 10:37 am
வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில், தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது மீண்டும் தென்கொரியாவுக்கு இணையாக தனது பழைய நேர மண்டலத்தை மாற்றியுள்ளது
Samayam Tamil north 2
ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கி சென்ற வடகொரியா!


1912ஆம் ஆண்டு முதல் வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஜப்பானின் நேரத்தை பின்பற்றி வந்தன. ஆனால் கிம் ஜாங் உன், வட கொரியாவின் அதிபராக பதவியேற்ற பிறகு, ஜப்பான் நேர அளவில் நீட்டிக்க விரும்பாமல், அரை மணி நேரத்தை குறைக்க உத்தரவிட்டார்.

இதனால் 2015ஆம் ஆண்டில் தென் கொரியக் கடிகாரம் காட்டும் நேரத்தை விட 30 நிமிடம் குறைவான நேரத்தை பின்பற்ற வட கொரியா முடிவுசெய்தது. ஆனால் தென் கொரியா தொடர்ந்து ஜப்பான் நேரத்தையே பின்பற்றி வந்தது.

(இடது) தென்கொரிய நேரம்- (வலது) வடகொரிய நேரம்


இந்த நிலையில் வட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், நேர மண்டலமும் ஒன்றாகும்.

அந்தவகையில் தற்போது இரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை மாற்றியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த செய்தி