ஆப்நகரம்

அமெரிக்காவை வம்புக்கிழுக்கும் வடகொரியா!

வடகொரிய நாடு தடையை மீறி மீண்டும் அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரியா இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

TNN 15 Sep 2017, 10:51 am
சியோல்: வடகொரிய நாடு தடையை மீறி மீண்டும் அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரியா இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
Samayam Tamil north korea has tested a nuclear weapon this morning says south korean army
அமெரிக்காவை வம்புக்கிழுக்கும் வடகொரியா!


உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனையையும் கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

இந்நிலையில் இன்று (செப் 15) காலை வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வடகொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுப்படையினர் இந்த ஏவுகணை குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர். அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே ஏற்கனவே அணுஆயுத சோதனைகளால் கருத்து வேறுபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

North Korea has tested a nuclear weapon this morning says South Korean Army.

அடுத்த செய்தி