ஆப்நகரம்

வெள்ளை மாளிகையை தூள் தூளாக்கிய வடகொரியா: அமெரிக்காவை மிரட்டும் அதிர்ச்சி வீடியோ

வெள்ளை மாளிகையை தாக்குவது போல் வீடியோவை வெளியிட்டு, வடகொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 28 Apr 2017, 6:18 pm
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையை தாக்குவது போல் வீடியோவை வெளியிட்டு, வடகொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil north korea releases video footage of simulated attack blowing up the white house
வெள்ளை மாளிகையை தூள் தூளாக்கிய வடகொரியா: அமெரிக்காவை மிரட்டும் அதிர்ச்சி வீடியோ


உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜன் குண்டை சோதனையிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதனால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்காவும், ஐ.நா சபையும் விதித்துள்ளன. கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா தனது கார்ல் வின்சன் போர்க் கப்பலை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பியது. அதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் வடகொரியா ஒரு மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் மிச்சிகன் நீர்மூழ்கி கப்பலை தாக்குவது போன்றும், வெள்ளை மாளிகை வெடித்து சிதறுவது போன்றும் மாதிரி வீடியோ அமைந்துள்ளது. முடிவில் அமெரிக்க கொடி எரிவது போன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோவில் பேசும் பெண் ஒருவர் வடகொரியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தால், அவர்கள் தான் அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

North Korea releases video footage of simulated attack blowing up the White House.

அடுத்த செய்தி