ஆப்நகரம்

கொரியா தீபகற்பத்தில் பீதியைக் கிளப்பும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

தென் கொரிய நாட்டின் கடற்கரைக்கு வந்த அமெரிக்கக் கப்பலால் அந்நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

TNN 25 Apr 2017, 5:58 pm
சியோல்: தென் கொரிய நாட்டின் கடற்கரைக்கு வந்த அமெரிக்கக் கப்பலால் அந்நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil north korea tensions us submarine arrives in south korea
கொரியா தீபகற்பத்தில் பீதியைக் கிளப்பும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்


அமெரிக்காவின் ஆணு ஆயுதங்கள் தாங்கிய நீர்முழ்கி கப்பல் மிசிகான் செவ்வாய்க்கிழமை தென் கொரிய நாட்டின் கடற்கரைக்குக்கு வந்தது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

வட கொரிய நாட்டுடனான உறவு குறித்த ஆலோசனைக்காக நாளை அமெரிக்க செனட் உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல் தென் கொரியா வந்துள்ளது வட கொரியா அரசின் கோபத்தைத் தூண்டிள்ளது.

மேலும் இன்று வட கொரியா தனது 85வது ராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது. ஆண்டு தோறும் ராணுவ தினத்தில் வட கொரியா ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளது. இந்த ஆண்டும் ஏவுகணை சோதனை நடக்கலாம் என்ற ஐயம் இருக்கிறது. இந்த சந்தேகத்தை உறுதிசெய்யும் விதமாக வட கொரியா ஏவுகணை சோதனைக்கான வேலையை மேற்கொண்டுள்ளதை அமெரிக்க செயற்கைக் கோள் காட்சி வெளியாகியுள்ளது. இத்தகு காரணங்களால், கொரிய தீபகற்பகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

அடுத்த செய்தி