ஆப்நகரம்

அவர் திரும்ப வரணும் : ட்ரம்புக்காக வருந்தும் கிம்

அமெரிக்க அதிபர் குணமடைய வேண்டுமென வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Oct 2020, 11:02 am

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ராணுவ மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ட்ரம்பின் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Samayam Tamil Trump - Kim Jong Un (Photo: AP)


அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில் அதிபருக்கே கொரோனா வந்திருப்பது கொரோனாவை எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.

அதிபர் ட்ரம்புக்கு என்ன ஆச்சு? அவசரமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைவார் என்று நம்புவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்புக்கே கிம் ஜான் அன் நேரடியாக தகவல் அனுப்பியுள்ளதாக வடகொரிய அரசு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்புக்கும் அவரது மனைவிக்கும் கிம் ஜாங் அன் தனது அனுதாபங்களை தெரிவித்ததாக வடகொரிய மத்திய செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும், ட்ரம்ப் விரைவில் குணமடைவார் என கிம் ஜாங் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், இருவருக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா, அமெரிக்கா இடையேயான பிரச்சினையை தீர்க்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. எனினும், இரு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாக அமெரிக்க அரசு செயலர் மைக் பாம்போ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி